புனித மிக்கேல் கல்லூரியில் கின்னஸ் சாதனைக்கான நிகழ்வு......

புனித மிக்கேல் கல்லூரியில் கின்னஸ் சாதனைக்கான நிகழ்வு......

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் புனித மிக்கேல் கல்லூரியின் 150வது வருட கல்லூரி தினத்தை சிறப்பிக்கும் வகையில், 'அசாத்தியமானதை சாத்தியமாக்குவோம்' எனும் தொனிப்பொருளில் சாரணர் மாணவர்களினால் 2124 பிளாஸ்டிக் போத்தல்களை கொண்டு 150 வது கல்லூரி வருடத்தை குறிக்கும் வகையில், கின்னஸ் சாதனைக்காக நிகழ்த்தப்பட்டது.

நிகழ்வில் ஜனாதிபதி விருதினை பெற்ற சாரணர் மாணவர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்த தெய்வேந்திரன் மதுஷகன் எனும் மாணவன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

புனித மிக்கேல் கல்லூரி அதிபர் ஜோன் பிரபாகரன், மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார், கல்லடி 231வது பிரிவு இராணுவ கட்டளை அதிகாரி, மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட் பொலிஸ் அத்தியட்சகர், அருட்தந்தையர்கள், சாரணர் ஆணையாளர்கள்இ, கல்லூரி சாரணர் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

2124 பிளாஸ்டிக் போத்தல்களை கொண்டு நிகழ்த்தப்பட்ட கின்னஸ் சாதனை செயற்பாட்டு நிகழ்விற்கு, தேசிய கணக்காய்வு அலுவலக உதவி கணக்காய்வு உத்தியோத்தர் ரோபட் அலோசியஸ், மண்முனை வடக்கு பிரதேச செயலக கணக்காளர் எஸ்.புவனேஸ்வரன், வாகரை பிரதேச செயலக கணக்காளர் சந்திரகலா ஜெயேந்திரா ஆகியோர் கின்னஸ் சாதனைக்கான பரிந்துரை நடுவர்களாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

Comments