மட்டு.மேற்கு கல்வி வலயத்திற்குபட்ட 899 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு.......

 மட்டு.மேற்கு கல்வி வலயத்திற்குபட்ட 899 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு.......

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு இன்று  (28) நடைபெற்றது.

பெரெண்டினா அமைப்பின் ஊடாக பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட ஐந்து பாடசாலைகளில் கல்வி பயிலும் 899 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வின் முதற்கட்ட நிகழ்வு கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ண மிசன் பாடசாலையில் பெரெண்டினா அமைப்பின் பிரதி பொது முகாமையாளர் முகமட் றஹீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பட்டிப்பளை  பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் அவர்களும் கலந்து கொண்டு 526 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments