காத்தான்குடியில் 8.5 கி.மீ. நீளமான காபட் வீதி........
இக்குழுவில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சிரேஷ்ட பொருயியலாளர் ஏ. கலாதரன், சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோத்தர் எம்.எம்.பைசால், அமைச்சர் நசீர் அகமதின் பிரத்தியேகச் செயலாளர் எம்.எம்.சருஜ் மற்றும் முன்னாள் ஏறாவூர் நகர சபை தவிசாளர் எம். அப்துல் நாசர் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
சுற்றாடல் அமைச்சர் நசீர் அகமதின் ஏற்பாட்டில் இத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ள காத்தான்குடி தீன் வீதி (நதியா கடற்கரை வீதி உட்பட), கர்பலா பாலமுனை வீதி, அல் அக்சா பள்ளிவாயல் அருகில் தொடங்கி பதுரியா வீதி, மஞ்சந்தொடுவாய், புதிய பாலமுனை வீதி ஊடாகச் சென்று பூநொச்சிமுனை சுனாமி விடமைப்பு திட்ட வீதியில் நிறைவுறும் 2.8 கி.மீ நீளமான வீதிகள் மற்றும் பஸ் நிலைய வீதி, மத்திய வீதி (பெண்சந்தை வீதி) மையவாடி வீதிகளை உள்ளடக்கிய வீதிகளுக்கான செலவு மதிப்பீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ் அறிக்கையானது எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் முடிவுறுத்தப்பட்டு மேற்படி ஐ.சி.டி.பி. திட்ட பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதுடன் திட்ட பணிமனையினால் இவ்வேலை நிறைவேற்றுவதற்கான கேள்வி பத்திரங்கள் கோரப்பட்டு ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டு இவ்வருட இறுதிக்குள் இவ்வேளைகள் பூரணப்படுத்தப்பட உள்ளதாக அறிய முடிகின்றது.
இம்மதிப்பீட்டுப் பணிகளில் பூநொச்சிமுனை அல் பறகத் கிராமிய மீனவர் அமைப்பின் தலைவர் எஸ்.எச்.ஏ.அஸீஸ், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.தாஹிர், பாலமுனை சனசமுக நிலைய தலைவர் எம்.பீ.எம்.பௌஸர், பாலமுனை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.ஜீ.எம்.ஜாபிர் ஆகியோரும் ஒத்துழைப்பு நல்கியிருந்தனர்.
Comments
Post a Comment