வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய தேசிய கல்லூரியின் 78 ஆவது பாடசாலை தினம் .........
மட்டக்களப்பு கல்குடா வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய தேசிய கல்லூரியின் 78 ஆவது பாடசாலை தினம் (02) நினைவு கூறப்பட்டது.
பழைய மாணவர்கள், கல்லூரி அபிவிருத்தி சங்கம் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வானது, கல்லூரி அதிபர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
1945 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் அமரர் நல்லையா மாஸ்ரர் என்பவரால் இக் கல்லூரி பிரதேச மாணவர்களின் நன்மை கருதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 'எம் வாழ்வில் அணையா தீபமாய் கல்விச் சுடரேற்றிய குருகுலமே' எம் எதிர்காலச் சமூகத்தின் விடியலுக்காய்உம்மை சிரம் தாழ்த்திக் கரம் கூப்பி வணங்குகிறோம் என்ற தொனிப் பொருளில் நிகழ்வுகள் நடைபெற்றன.
நிகழ்வில் கல்லூரி வரலாற்றில் கல்லூரிக்கு பல வழிகளிலும் சேவையாற்றி பங்களிப்பு செய்த முன்னாள் அதிபர்களின் சேவைகளை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தேசிய மட்டத்தில் உயர் சாதனை படைத்து கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் சாண்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். விசேட பரிசளிப்பு நிகழ்வாக 'முத்துக்கள் செல்வங்கள் விருது' வழங்கப்பட்டதுடன், பழைய மாணவர்களின் பங்களிப்பில் பாடசாலை இலச்சினை மற்றும் நல்லையா கீதம் இசை என்பன வெளிடப்பட்டன.
தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி பாதணிகள், நூலகத்திற்கான ஒரு தொகுதி நூல்கள்இவறுமை நிலையில் கல்வி கற்க முடியாமல் உள்ள மாணவர்களின் எதிர்கால கல்விற்கான நிதி உதவி என பல்வேறு பாடசாலை மட்ட தேவைகளை மையப்படுத்தியதான உதவிகள் இதன்போது கல்லூரியில் கல்வி கற்ற முன்னாள் மாணவர் பிரிவுகளினால் ஏனைய பாடசாலைகளுக்கு முன்னுதாரனமாக செயற்படும் வண்ணம் பல்வேறுபட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் அதிதிகளாக முன்னாள் அதிபர்கள், பல்கலைக் கழக விரிவுரையாளர்கள், ஆரையம்பதி உயர் தொழில் நுட்பக்கல்லூரி பணிப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment