மட்டக்களப்பில் 74,000 மில்லி லீற்றர் கசிப்புடன் இருவர் கைது.........
74,000 மில்லி லீற்றர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை வஸ்த்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாம் தெரிவித்தார்.
இச்சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி சிகரம் பகுதியில் இன்று வியாழக்கிழமை (13) மதியம் 12 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த சட்டவிரோத கசிப்பு கொள்கலன்களை பொலிஸார் மீட்டுள்ளதுடன் சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்ககளில் ஒருவரிடமிருந்து 70,000 மில்லி லீற்றர் மற்றொருவரிடமிருந்து 4,000 மில்லி லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதானவர்கள் ஆரையைம்பதியைச் சேர்ந்த 30 மற்றும் 31 வயதைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment