கிழக்கு மாகாண ஆளுநரினால் பண்னையாளர்களுக்கு 3.4 மில்லியன் ரூபாய் இழப்பீடாக வழங்கிவைப்பு!!

 கிழக்கு மாகாண ஆளுநரினால் பண்னையாளர்களுக்கு 3.4 மில்லியன் ரூபாய் இழப்பீடாக வழங்கிவைப்பு!!

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 107 பண்னையாளர்களுக்கான இழப்பீடு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (12) கிழக்கு மாகாண ஆளுநரின் பங்கேற்புடன் மட்டக்களப்பில் இடம்பெற்றது.
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 08/09 ஆம் திகதிகளில் Mandous என்றழைக்கப்பட்ட குளிருடன் கூடிய சூறாவழி ஏற்பட்டு குறிப்பாக திறந்த வெளியில் வளர்க்கப்பட்ட கால்நடைகள் கிழக்கு மாகாணத்தில் அதிகளவில் இறந்திருந்தன. இவ்வாறாக இறந்திருந்த மாடு மற்றும் ஆடு வளர்ப்பாளர்கள் மற்றும் பண்னையாளர்களுக்கான இழப்பிட்டு தொகையே இன்று (12) திகதி கிழக்கு மாகாண ஆளுநரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஏ.எம்.பாசி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இழப்பீடுகளை வழங்கி வைத்ததுடன், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் விசேட அதிதியாகவும், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் பூ,பிரசாந்தன் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்திருந்தனர். அத்தோடு ஏனைய திணைக்களம் சார் உயரதிகாரிகள், கால்நடை வைத்தியர்கள் உள்ளிட்ட பண்ணையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி செயலகத்தின் அனுசரணையுடன் வரலாற்றின் முதன் முறையாக இயற்கை அனரத்தம் ஒன்றுக்காக கால்நடைகளுக்கான இழப்பீட்டு தொகையாக 3.45 மில்லியன் ரூபாய் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Comments