செயற்கைக் கடற்கரையை பார்வையிட முதல் இரண்டு நாட்களில் 3,000க்கும் மேற்பட்டோர் வருகை.....
கொழும்பு துறைமுக நகரில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கைக் கடற்கரையை திறந்து வைத்த முதல் இரண்டு நாட்களில் 3,000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது செயற்கைக் கடற்கரை இதுவாகும், இது கடந்த சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
பார்வையாளர்கள் கடற்கரையில் இலவசமாக மகிழலாம் மற்றும் போர்ட் சிட்டி வளாகத்திற்குள் கட்டப்பட்ட நடைப் பாதையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உணவு வகைகளுடன் கூடிய உணவுக் கடைகளும் இப்பகுதியில் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளன, மேலும் செயற்கை கடற்கரையில் நீச்சல் மற்றும் நீர் விளையாட்டுகளுக்கான வசதிகளும் உள்ளன.
Comments
Post a Comment