ஹெல்ப் எவர் அமைப்பின் 250 ஆவது செயற்திட்டம்.....
கிழக்கு மாகாணத்தில் தன்னலமற்ற தொண்டர் சேவையினை மேற்கொண்டு வரும் ஹெல்ப் எவர் அமைப்பின் 250 ஆவது செயற்திட்டமாக 16 ஆகிய இன்றைய தினம் நாவலடி கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் பாரிய வேலைத்திட்டம்மேற்கொள்ளப்பட்டது.
ஹெல்ப் எவர் அமைப்பு தாம் கடந்து வந்த ஆரம்ப வளர்ச்சிப் பாதையினை நினைவு கூறும் வகையில் மிகவும் பயனுள்ள முறையாக நாவலடி கடற்கரையில் பிளாஸ்டிக் மாசினால் மனிதனிற்கு ஏற்படவிருக்கும் நோயினை இயன்றவரை கட்டுப்படுத்தும் நல் நோக்கத்துடன் இச்சிரமதான பணி நிகழ்வானது முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதில் சிறார்கள் கலந்து கொண்டதுடன், இயற்கையின் மொழி அமைப்பினரும், ஹெல்ப் எவர் அமைப்பின் நலன் விரும்பும் நல் உள்ளங்களும் இணைந்து வெற்றிகரமாக செயற்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment