ஆசிய கிண்ணம் 2023 - போட்டி அட்டவணை வௌியீடு..........
2023 ஆடவருக்கான ஆசிய கிண்ணத் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இலங்கை மற்றும் பாகிஸ்தானில் இம்முறை போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதில் இலங்கையில் 9 போட்டிகளும் பாகிஸ்தானில் 4 போட்டிகளும் இடம்பெறவுள்ளன.
இலங்கையின், கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டுத்திடல், கண்டி பல்லேகெலே சர்வதேச விளையாட்டுத் திடல் பாகிஸ்தானின் லாஹூர் சர்வதேச விளையாட்டுத்திடல் மற்றும் மல்டன் சர்வதேச விளையாட்டுத் திடலிலும் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
போட்டி அட்டவணைக்கு அமைய, பாகிஸ்தான், இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் குழு A யிலும், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் குழு B யிலும் இடம்பெற்றுள்ளன.
பாகிஸ்தான், இந்தியா அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 2 ஆம் திகதி கண்டி பல்லேகெலே சர்வதேச விளையாட்டுத் திடலில் இடம்பெறவுள்ளது.
இறுதிப் போட்டி செப்டம்பர் 17 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
Comments
Post a Comment