2023 LPL தொடரில் பி.லவ் கண்டி அணிக்காக வலைப்பந்து வீச்சாளர்களாக அறபா கல்லூரி மாணவர்கள்...

 2023 LPL தொடரில் பி.லவ் கண்டி அணிக்காக வலைப்பந்து வீச்சாளர்களாக அறபா கல்லூரி மாணவர்கள்...

அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள லங்கா பிரிமியர் லீக்கில் (LPL) தொடரில் மட்டக்களப்பு ஏறாவூர் அறபா கல்லூரியின் 04 வீரர்கள் கண்டி பி.லவ் அணிக்காக வலைப்பந்து வீச்சாளராக பந்து வீசுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்மைக்காலங்களில் ஏறாவூர் அறபா கல்லூரியின் கிரிக்கெட் வீரர்கள் மிகச்சிறப்பாக தம் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். 2022ம் ஆண்டு 15 வயது பாடசாலைகள் மட்ட போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டி தெரிவாகி சாதனை படைத்து இப்போட்டியில் தம் திறமையயை வெளிக்கொணர்ந்த வீரர்களான ஹாரூன் ரஸீட் நகையான் மற்றும் நளீம் முகமட் பஹீஜ் ஆகியோர் 2024ல் நடைபெறவுள்ள 19 வயதிற்குட்பட்டோருக்கான உலக கிண்ண போட்டியிலும் விளையாட தெரிவு செய்யப்பட்டுள்ள 30 வீரர்களில் தெரிவாகியுள்ளனர், இவர்களுடன் 2023ம் ஆண்டு நடைபெற்று வரும் பாடசாலை மட்ட போட்டிகளில் இரட்டை சதம் விளாசி ஹட்ரிக் சாதனை படைத்த அப்துல் லத்தீப் சம்ஹான் அவர்களும், இர்சாத் முகமட் சபாய் ஆகியோருமே கண்டி அணிக்காக வலைப்பந்து வீச்சாளராக தெரிவாகியுள்ளனர்.

இது மாத்திரமன்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி கற்பதன் மூலம் இவர்களது விளையாட்டு திறமை வளர்க்கப்பட மாட்டாது, எனவே இவர்களை கொழும்பில் உள்ள பிரபல பாடசாலையில் இணைத்து இவர்களின் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக சியாம் இம்பிட் (Shyam Impett) அவர்களால் கொழும்பு வெஸ்லி (Whesly) கல்லூரியில் இம்மாணவர்கள் இணைக்கப்டுள்ளார்கள், அவர்கள் இனிவரும் காலங்களில் தங்கள் கல்வியை அங்கு தொடர்வதுடன் கொழும்பு வெஸ்லி கல்லுரிக்காகவும் களம் இறங்கவுள்ளனர்.

இவர்களின் அசுர திறமையை கண்ட கொழும்பில் விளையாட்டு உபகரணங்களை விற்பனை செய்யும் ஸ்பீட் (Speed) நிறுவனத்தின் ஸ்தாபகர் அஸ்ஹர் (Azhar) அவர்கள் ஒவ்வொரு வீரர்களுக்கும் 75000 ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இது தவிர இம்மாணவர்களின் திறமையை ஆரம்பம் முதலே கண்டு பிடித்து தான் செய்யும் தொழிக்கு விசுவாசமாக, தான் கற்றதை தம் மண்ணுக்கு அர்பணித்து மண்ணின் பெயரை ஊர் அறிய அர்பணிப்பான சேவை செய்த இப்பாடசாலையின் ஆசிரியர் முகமட் பாஸீல் அவர்களுக்கு தான் முழுப்பாராட்டும் வழங்கப்பட வேண்டும். மட்டக்களப்பு மண்ணில் இன்னும் பல வீரர்கள் இருக்கின்றார்கள் தூசு தட்டி வெளியில் கொண்டு வர  வேண்டும்..













Comments