மட்டக்களப்பில் 1,659 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 55 வயதுடைய வியாபாரி கைது.......
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீடு ஒன்றை சனிக்கிழமை முற்றுகையிட்ட பொலிஸார் 1,659 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 55 வயதுடைய வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி டி.எஸ்.எஸ்.கே.தெலங்காவலகே தெரிவித்தார்.
சனிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள குறித்த வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டனர். இதன் போது வியாபாரத்துக்காக கொண்டுவரப்பட்டு பதுக்கிவைத்திருந்த கஞ்சாவை மீட்டதுடன் 55 வயதுடைய ஒருவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் நீண்டகாலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளார் எனவும் இவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்
Comments
Post a Comment