தமது 150வது வருட நிகழ்வை கோலாகலமாக தொடங்கிய புனித மிக்கல் கல்லூரி......
இவ்வருடம் தமது 150 வருடத்தை கொண்டாடும் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி மட்டக்களப்பில் இதுவரை எந்த பாடசாலையும் தொடங்காத ஒரு புதுவித தொடக்கத்தை ஆரம்பித்துள்ளது.
மட்டக்களப்பில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த பாடசாலைகளான புனித மிக்கல் கல்லூரி, மெதடிஸ்த மத்திய கல்லூரி, மட்டக்களப்பு இந்துக்கல்லுரி மற்றும் மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலையை முதல் தடவையாக ஒன்றிணைத்து தமக்கிடையே ஓரு T/10 தொடரை ஏற்பாடு செய்து சிவானந்தா மைதானத்தில் கோலகலமாக தங்கள் 150வது வருட (29) நிகழ்வை ஆரம்பித்துள்ளனர்.
இதில் 35 வயதிற்குட்பட்ட அணி மற்றும் 35 வயதிற்கு மேற்பட்ட அணி என இரண்டாக வகுத்து இப்போட்டிகளை நடத்த திட்டமிட்டு இதன் ஆரம்ப நிகழ்வுக்ள இன்று (29) ஆரம்பமாகியுள்ளன நாளையும் தொடரவுள்ள இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு 150 வருட நினைவு கிண்ணமும் பெறுமதி வாய்ந்த பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
Comments
Post a Comment