13 வயதுக்குட்பட்ட மாவட்டமட்ட பூப்பந்தாட்ட குழாமிற்கு காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் ஏழு பேர் தெரிவு........

 13 வயதுக்குட்பட்ட மாவட்டமட்ட பூப்பந்தாட்ட குழாமிற்கு காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் ஏழு பேர் தெரிவு........

இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சம்மேளனத்தினால் மாவட்ட மட்டத்தில் 13 வயதுக்குட்பட்ட பூப்பந்தாட்ட குழாமினை தெரிவு செய்வதற்கான போட்டி இன்று (22) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது. இத்தெரிவு போட்டியில் ஆண்கள் பிரிவில் 15 பேரும், பெண்கள் பிரிவில் 15 பேருமாக மொத்தமாக 30 வீரர்களைத் தெரிவு செய்வதற்காக நடாத்தப்பட்டது. 

இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 15 வீரர்களில் 07 வீரர்கள் காத்தான்குடி மத்திய கல்லூரியிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக் விடயமாகும்.

Comments