மட்டக்களப்பில் பெற்றோருடன் வாழ மறுத்த 11 வயது சிறுவன்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.........
மட்டக்களப்பில் பெற்றோர் மதம் மாறிய நிலையில் தாய், தந்தையுடன் மதம் மாறி வாழ மறுத்த 11 வயது சிறுவனை பாட்டியுடன் செல்ல மட்டக்களப்பு நீதிமன்றம் (18) உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் அவரது கணவன் மற்றும் இரு பிள்ளைகளுடன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறியுள்ளார்.
இந்த நிலையில் அவர்களது 11 வயதுடைய மகன் மதமாற்ற நடவடிக்கையையடுத்து அங்கிருந்து வெளியேறி பாட்டியுடன் சென்று தன்னை வலுகட்டாயமாக தாய், தந்தை மதமாற்ற முயற்சிப்பதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது குறித்த விசாரணையை முன்னெடுத்த பொலிஸார் பெற்றோருக்கு எதிராக (18) மட்டு நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர். குறித்த வழக்கினை விசாரித்த நீதவான் சிறுவன் பெற்றோருடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்தமையினால் பாட்டியுடன் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.
Comments
Post a Comment