'அஸ்வெசும' திட்டம்: மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை ஜூலை 10 வரை தாக்கல் செய்ய சந்தர்ப்பம்.......

 'அஸ்வெசும' திட்டம்: மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை ஜூலை 10 வரை தாக்கல் செய்ய சந்தர்ப்பம்.......

அஸ்வெசும' நலத்திட்ட உதவித் திட்டத்தின் பயனாளிகள் பட்டியல் தொடர்பாக கிட்டத்தட்ட 688,000 முறைபாடுகளும் 9,000 ஆட்சேபனைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் மதிப்பிடப்படுகின்றன. மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை இணையம் மூலமாகவும், நாடு முழுவதிலும் உள்ள பிரதேச செயலகங்களில் நேரடியாகவும் ஜூலை 10 ஆம் திகதி வரை தாக்கல் செய்ய முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, 'அஸ்வெசும' திட்டம் தொடர்பான மேலதிக தெளிவுபடுத்தல்கள் மற்றும் விசாரணைகளுக்கு, பொது மக்கள் '1924' என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்டவுடன் 'அஸ்வெசும' நலத்திட்ட உதவித் திட்டத்தின் இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்றார்.


அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னேற்றம் தொடர்பாக நலன்புரி நன்மைகள் சபையின் உறுப்பினர்களுடன் விரிவான கலந்துரையாடலையும் மேற்கொண்டதாக இராஜாங்க அமைச்சர் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

'


Comments