பரிசு மழைகளை அள்ளி வழங்கும் VMD நிறுவனம்......
மட்டக்களப்பில் பெண்கள் உதைபந்தாட்டத்தை பாடசாலை மட்டத்தில் வளர்த்தெடுக்க வேண்டும் எனும் சிந்தனையில் மட்டக்களப்பு வேல்முருகன் டிஸ்றிபியூட்டஸ் (VMD) நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 16 பாடசாலைகளை இணைத்து பாடசாலை மட்டத்திலான பெண்கள் உதைபந்தாட்ட போட்டியை மிகப்பிரம்மாண்டமாக ஜூலை 1ம், 2ம் திகதிகளில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடாத்தவுள்ளது. அதற்காண அணி தெரிவு மற்றும் போட்டி அட்டவனை தொடர்பான அறிமுக கூட்டம் நேற்றைய தினம் (29) வேல்முருகன் டிஸ்றிபியூட்டஸ் (VMD) நிறுவன காரியாலத்தில் VMD ஸ்தாபகர் சண்முகம் காசிப்பிளளை அவர்களின் ஏற்பாட்டில் VMD நிறுவனத்தின் பங்குதாரர் காசிப்பிள்ளை சதீஸன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது வழங்கப்படவுள்ள பரிசில்கள் பற்றி அறிவிக்கப்பட்டது.
முதலாமிடத்தை பெறும் பாடசாலைக்கு வெற்றிக்கிண்ணமும், ஒரு லட்சம் (100000/=) ரூபாய் பெறுமதியான உதைபந்தாட்ட உபகரணங்களும், போட்டியில் கலந்து கொண்ட அணைத்து வீராங்கனைகளுக்கும் பதக்கங்களும் வழங்கப்படுவதுடன், இரண்டாமிடத்தை பெறும் பாடசாலைக்கு வெற்றிக்கிண்ணமும் எழுபத்தி ஜயாயிரம் (75000/=) ரூபாய் பெறுமதியான உதைபந்தாட்ட உபகரணங்களும் போட்டியில் கலந்து கொண்ட அணைத்து வீராங்கனைகளுக்கும் பதக்கங்களும் வழங்கப்படுவதுடன், மூன்றாமிடத்தை பெறும் பாடசாலைக்கு வெற்றிக்கிண்ணமும், ஜம்பதினாயிரம் (50000/=) ரூபாய் பெறுமதியான உதைபந்தாட்ட உபகரணங்களும் போட்டியில் கலந்து கொண்ட அணைத்து வீராங்கனைகளுக்கும் பதக்கங்களும் வழங்கப்படுவதுடன், நான்காமிடத்தை பெறும் பாடசாலைக்கு இருபத்திஜயாயிரம் (25000/=) ரூபாய் பெறுமதியான உதைபந்தாட்ட உபகரணங்கள் வழங்குவதாகவும், அரையிறுதிக்கு வாய்ப்புபெறாத சகல பாடசாலை அணிகளுக்கும் பத்தாயிரம் (10000/=) ரூபாய் பெறுமதியான உதைபந்தாட்ட உபகரணங்களும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் ஒவ்வொரு போட்டிகளும் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தும் ஒரு வீராங்கனைக்கு சிறப்பு பரிசு வழங்கப்படுவதுடன், தொடரில் சிறந்த கோல் காப்பாளர், அதிக கோல்களை புகுத்தும் வீராங்கனை மற்றும் சகல துறைகளிலும் பிரகாசிக்கும் வீராங்கனைக்கும் சிறப்பு பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவித்து இருந்தனர்.
மட்டக்களப்பில் முதல் தடவையாக 16 பாடசாலைகளை இணைத்து இப்பெண்கள் உதைபந்தாட்ட போட்டியை VMD நிறுவனம் நடாத்துகின்றது, எனவே தூர பிரதேசங்களில் இருந்து பாடசாலைகள் இப்போட்டியில் பங்குபற்றுகின்றன எனவே மட்டக்களப்பு மண்ணில் ஓர் சிறந்த பெண்கள் உதைபந்தாட்ட அணியை உருவாக்க அணைவரும் கைகோர்க்குமாறு VMD நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
Post a Comment