வெற்றிகரமாக முடிந்த Trophy of VMD போட்டி அட்டவணை....
எதிர்வரும் 1ம்,2ம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 16 பாடசாலைகளை இணைத்து நடாத்தப்படவுள்ள Trophy of VMD நிறுவனத்தின் பெண்கள் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் போட்டி அட்டவனையை VMD நிறுவனத்தின் தலைவர் காசிப்பிள்ளை சதீசன் அவர்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் பணிப்பாளர்களான S.ரஞ்சன் மற்றும் E.சிவநாதன் மற்றும் போட்டி ஒருங்கிணைப்பாளர்களான S.விஜயகண்ணா மற்றும் S.தேவராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 04 கல்வி வலயங்களில் இருந்து அன்மைக்காலங்களில் பெண்கள் உதைபந்தாட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய 04 அணிகள் முன்னிலைப்படுத்தப்பட்டு மொத்தம் 16 அணிகள் தெரிவு செய்யப்பட்டு போட்டி அட்டவணை வெளிடப்பட்டது. இதனடிப்படையில்:
மட்டக்களப்பு வலயம் சார்பாக:
- 1.புனித ஜோசப் கல்லூரி – தன்னாமுனை
- 2.விவேகானந்தா மகளீர் கல்லூரி – மட்டக்களப்பு
- 3.ஊறணி சரஸ்வதி வித்தியாலயம் - மட்டக்களப்பு
- 4.மஹாஜனா கல்லூரி – மட்டக்களப்பு
மட்டக்களப்பு மேற்கு வலயம் சார்பாக:
- 1. 40ம் வெட்டை விபுலானந்தா வித்தியாலயம்.
- 2. முனைக்காடு விவேகானந்தா மகா வித்தியாலயம்.
- 3. பன்சேனை பாரி வித்தியாலயம்.
- 4.அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயம்.
கல்குடா வலயம்ட சார்பாக:
- 1.பால்சேனை தமிழ் மகா வித்தியாலயம்.
- 2.கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்.
- 3.கட்டுமுறிவுக்குளம் அரச தமிழ் மகா வித்தியாலயம்
- 4.வம்மி வட்டுவான் வித்தியாலயம்.
பட்டிருப்பு வலயம் சார்பாக:
- 1.பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம்.
- 2.பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம்.
- 3.மண்டுர் 14 சக்தி வித்தியாலயம்.
- 4.தம்பலவத்த கணேச வித்தியாலயம்.
ஆகிய பாடசாலைகள் தெரிவாகியுள்ளன. இவர்களுக்கான போட்டிகள் அணைத்தும் 1ம் திகதி காலை 8.00 மணிக்கு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன் தொடர்ச்சியாக 2ம் திகதியும் நடைபெற்று இறுதிப்போட்டிகள் நடைபெறவுள்ளதாக போட்டி ஏற்பாட்டர்களான வேல்முருகன் டிஸ்றிபியூட்டஸ் நிறுவன உரிமையாளர் காசிப்பிள்ளை சதீசன் அறிவித்துள்ளார்.
Comments
Post a Comment