“Trophy Of VMD” பெண்களுக்கான உதைபந்தாட்ட போட்டி – 2023
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் உதைபந்தாட்டத்தை பாடசாலை மட்டத்தில் வளர்த்தெடுப்பதற்காக மட்டக்களப்பு வேல்முருகன் டிஸ்றிபியூட்டரஸ் நிறுவனம் (VMD) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 16 பாடசாலைகளை ஒன்றினைத்து பெண்களுக்கான விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்று போட்டியை மிக பிரம்மாண்டமாக நடாத்தவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் உதைபந்தாட்டம் காலத்திற்கு காலம் சிறப்படைந்து வந்ததை எம்மால் அவதானிக்க முடிகின்றது குறிப்பாக கட்டுமுறிவுக்குளம், பன்சேனை, கடுக்காமுனை, அம்பிளாந்துறை, முனைக்காடு மற்றும் தன்னாமுனை போன்ற கிராமங்களை சேர்ந்த பாடசாலைகள் தம் திறமையை வெளிக்கொணர்ந்து வெற்றிகளை குவித்த வரலாற்றை நாம் அறிவோம். இப்பாடசாலை மாணவியர்களுக்காக ஒரு தொடரை ஆரம்பித்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு என ஒரு சிறந்த அணியை உருவாக்க வேண்டும் என்கின்ற சிந்தனையில் மட்டக்களப்பு வேல்முருகன் டிஸ்றிபியூட்டரஸ் நிறுவனம் முதல் தடவையாக “Trophy Of VMD” எனும் தொடரை ஆரம்பித்துள்ளது. இது பாராட்டத்தக்க விடயமாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 16 பாடசாலைகளை ஒன்றிணைத்து முதல் தடவையாக இப்பெண்கள் உதைபந்தாட்டத்தை நடாத்தவுள்ளது. இப்போட்டிகளானது ஜுலை மாதம் 1ம் மற்றும் 2ம் திகதிகளில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் பரிசு தொடர்பான விபரங்கள் ஓர் இரு தினங்களில் அறிவிக்கப்படவுள்ளன. எனவே ஆட்டத்தை ஆரம்பிக்க தயாராகுமாறு பாடசாலை மாணவியர்களை கேட்கின்றோம்.
"மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் உதைபந்தாட்டத்தை ஊக்குவிப்போம்"
Comments
Post a Comment