தமிழ் வீரர்களுக்கு கைகொடுக்கும் வாகீசன்: மட்டு தேனு LPLல் உள்ளே......
இலங்கையில் தழிழ் பேசும் வீரர்களின் திறமைக்கு மீண்டும் கைகொடுத்து உதவியுள்ளார் வாகீசன். இலங்கையில் வருடந்தோறும் நடைபெற்று வரும் லங்கா பிரிமியர் லீக்கில் தொடர்ச்சியாக தழிழ் பேசும் வீரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி அவர்களின் திறமையை வெளிக் கொணர உதவியுள்ளார் வாகீசன்.
இதன் அடிப்படையில் 2023ம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் போட்டியில் ஜவ்னா கிங்ஸ் அணிக்காக களம் காண யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந் வியாஸ்காந் மற்றும் தீசன் விதுர்சன் அவர்களுக்கும் மட்டக்களப்பை சேர்ந்த ரட்னராஜா தேனுரதன் அவர்களுக்கும் சந்தர்பத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
2020ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட லங்கா பிரிமியர் லீக் தொடர் 2023ம் ஆண்டு 04வது தொடராக நடைபெறவுள்ளது. இருந்த போதிலும் தொடர்ச்சியாக 03 வருடங்களும் ஹட்றிக் வெற்றியுடன் திகழும் ஜவ்னா அணி இம் முறையும் தமிழ் பேசும் 03 வீரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளது நாம் பெருமைப்பட வேண்டிய விடயமாகவுள்ளது.
மட்டு தேனுரதன்:
மட்டக்களப்பில் இருந்து இம்முறையும் ரெட்ணராஜா தேனுரதன் 5000 அமெரிக்க டொலர்களுக்கு ஜவ்னா கிங்ஸ் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இவர் 2020ம் ஆண்டு லங்கா பிரிமியர் லீக் போட்டியில் ஒரு வலைபந்து வீச்சாளராக தெரிவு செய்யப்பட்டு செயற்பட்ட ஒரு வீரர் ஆவார். 2021ம் ஆண்டு ஜவ்னா கிங்ஸ் அணிக்கான 20 பேர் கொண்ட குழாமில் நேரடியாக தெரிவு செய்யப்பட்டும், தற்போதைய 2023ம் ஆண்டிலும் நேரடியாக ஜவ்னா கிங்கிஸ் அணிக்காக தெரிவாகியுள்ளார்.வீரர்களை அதிக விலை கொடுத்த வாங்கிய ஜவ்னா கிங்ஸ்:
லங்கா பிரிமியர் லீக் தொடரில் முதன்முறையாக இடம்பெறும் வீரர்களுக்கான ஏலத்தில் 204 தேசிய வீரர்களினதும், 156 வெளிநாட்டு வீரர்களினதும் பெயர்கள் உள்ளடங்கியிருந்தன.
சுமார் 500 வெளிநாட்டு வீரர்கள் ஏலத்திற்காக விண்ணப்பித்திருந்த நிலையில், இறுதிகட்டமாக 160க்கும் குறைந்த வீரர்களே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு டில்ஷான் மதுஷங்க ஜப்னா கிங்ஸ் அணியினால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இவரை 92 ஆயிரம் அமெரிக்க டொலருக்கு நீண்ட போட்டிக்கு மத்தியில் ஜப்னா கிங்ஸ் அணியினால் பெற்றுக்கொள்ளப்பட்டார்.
அவருக்கு அடுத்தபடியாக 80 ஆயிரம் அமெரிக்க டொலருக்கு சரித் அசலங்க, ஜப்னா கிங்ஸ் அணியினால் ஏலத்தில் எடுக்கப்ட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment