ஏறாவூர் யங்ஸ்டார் விளையாட்டு கழகம் முதலாம், இரண்டாம் இடத்தை தக்க வைத்தது.....
மட்டக்களப்பு கல்லடி கடல்மீன் விளையாட்டு கழகத்தின் 42 வது ஆண்டு பூர்த்தியினை சிறப்பிக்கும் முகமாக அணிக்கு 7 பேர் கொண்ட விலகல் முறையிலான மூன்று நாள் பகல், இரவு உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி போட்டி நிகழ்வுகள் (11)ம் திகதி இடம்பெற்றது.
குறித்த உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு உதைபந்தாட்டச் சங்கம், படுவான்கரை உதைப்பந்தாட்ட லீக், காத்தான்குடி உதைப்பந்தாட்ட லீக், ஓட்டமாவடி உதைப்பந்தாட்ட லீக், கல்குடா உதைப்பந்தாட்ட லீக் போன்ற பதிவுசெய்யப்பட்ட கழகங்களில் இருந்து சுமார் 70 அணிகள் பங்குபற்றியது குறிப்பிடத்தக்க விடயமாகும். இப்போட்டியில் ஏறாவூர் யங்ஸ்ரார் அணியானது முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களை தட்டிகொண்டது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதன் போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளருமான கௌரவ. பூ.பிரசாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசில்களை வழங்கி வைத்திருந்தார்.
மேற்படி நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பாராளுமன்றத்துக்கான இணைப்புச் செயலாளர் ஈஸ்வரராஜா, மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்வரன், மட்/கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலய அதிபர் தவேந்திரகுமார், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சுரேஸ்குமார் உட்பட விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment