மட்டு மாவட்ட பாடசாலை கிரிக்கெட்டில் மட்டு மாணவர்களின் கலக்கல் ஆட்டங்கள்.....

 மட்டு மாவட்ட பாடசாலை கிரிக்கெட்டில் மட்டு மாணவர்களின் கலக்கல் ஆட்டங்கள்.....

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் நடாத்தும் 2023ம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கிடையிலான Div-III போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளின் வீரர்கள் தம் திறமையை மிகவும் சிறப்பாக வெளிக்கொணர்வதை எம்மால் அவதானிக்க முடிகின்றது 15 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் சாதனை படைத்த வீரர்கள், தற்போது 17 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியிலும் சாதனை படைத்துள்ளனர். 17 வயதிற்குட்டோருக்கான ஒரு போட்டியில் சிவானந்தா பாடசாயின் திரு 198 ஓட்டங்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.

திரு - 198

 உண்மையில் பாராட்டப்பட வேண்டிய வீரர்கள் தான் மட்டக்களப்பு பாடசாலை மாணாக்கர்கள். 2023ம் ஆண்டுக்கான 17 வயதிற்குட்பட்டோருக்கான மட்டக்களப்பு பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் ஒன்று மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலைக்கும்  மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்றது.

சாருக்சன் - 78

 முதலில் துடுப்பெடுத்தாட களம் நுழைந்த மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலை 50 ஓவர்களில் 08 விக்கெட்டுக்களை இழந்து 430 இமாலைய ஓட்டத்தை பெற்று கொண்டதுடன் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. இதில் திரு அவர்கள் 198 ஓட்டங்களை பெற்று இரட்டை சதத்திற்கு இரண்டு ஓட்டங்களால் தவறவிட்டார். ஆனால் ஒரு ஆரம்ப விக்கெட்டுக்காக 275 ஓட்டங்கள் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவ் ஆரம்ப துடுப்பாட்டத்தில் திருவுடன் இணைந்த சாருக்சன் 275 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார். துடுப்பாட்டத்தில் திரு 198 ஓட்டங்களையும், சாருக்சன்  78 ஓட்டங்களையும் துவாரகன் 54 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.  

துவாரகன்  - 54 

பதிலுக்கு துடுப்பெத்தாட களம் நுழைந்த மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லாரி 15.3 ஓவர்களில் 58 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் சிவானந்தா பாடசாலை சார்பாக சாருக்சன் 03 விக்கெட்டையும், துவா 03 விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர்.

 இதன் அடிப்படையில் சிவானந்தா பாடசாலை முதல் இனிங்ஸ் வெற்றியை பதிவிட்டுக் கொண்டது. எனவே இம்மாணவர்களை பயிற்சியளித்த பயிற்றுவிப்பாளருக்கும் பெற்றோருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எனவே 2022ம் ஆண்டினை விட இவ்வருடம் பாடசாலை போட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2023ல் சூடு பிடித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. எம் இளையோரின் சாதனை உயர்ந்த கொண்டே செல்கின்றன. எனவே நாமும் அவர்களுக்கான வாழத்துக்களை தெரிவித்து உற்சாகப்படுத்துவோம்.


Comments