மட்டக்களப்பில் சுகாதாரப் பிரிவினால் சர்வதேச யோகா தினம் அனுஷ்டிப்பு .....

 மட்டக்களப்பில் சுகாதாரப் பிரிவினால் சர்வதேச யோகா தினம் அனுஷ்டிப்பு .....

சர்வதேச யோகாதினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களத்தினால் மனித நேயத்திற்கான யோக எனும் தொனிப்பொருளை முன்வைத்து விழிப்புணர்வு யோகப் பயிற்சி நடைபெற்றது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பார் ஜி.சுகுணன் தலைமையில் யோகா தினம் வெபர் மைதானத்தில் (21) இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கலந்து சிறப்பித்தார்.
அரச உத்தியோகத்தர்களுக்கு உடல் உள ஆரோக்கியத்தினை வளப்படுத்துவற்காக சித்த மருத்துவர்களினால் யோகா பயிற்சிகள் இதன் போது வழங்கப்பட்டது.
வாழும் உயிர் கலையான யோகாவின் மூலம் எமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டும்மல்லாது உள ஆரோக்கியத்தையும் சிறப்பாக பேண உதவுகின்றது என அதிதிகளினால் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
இதன்போது சித்த ஆயுர்வேத திணைக்கள வைத்தியர்களினால் யோகாசனம் தொடர்பான விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டதுடன் யோகாசனப்பயிற்சிகள் நெறிப்படுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கனகசிங்கம், கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் டாக்டர் அருளானந்தம், கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட தலைவர் கலாநிதி சதானந்தன், பிரதேச செயலாளர்கள், வைத்திய நிபுணர்கள், சுகாதார அதிகாரிகள், துரைசர் நிபுணர்கள் , சுகாதார பரிசோதகர்கள், ஆசிரியர்கள், தாதியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.







Comments