மட்டக்களப்பு மின்தகனசாலையில் பிரேதங்களை தகனம் செய்வதற்கான நடைமுறைகள்.......

 மட்டக்களப்பு மின்தகனசாலையில் பிரேதங்களை தகனம்  செய்வதற்கான நடைமுறைகள்.......

மட்டக்களப்பு மாநகர சபையினால் நிர்மாணிக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வரும் கள்ளியங்காடு மின்தகனசாலையில் பிரேதங்களை தகனம்  செய்வதற்கான நடைமுறைகள். 

1. மின் தகனத்திற்கான அனுமதியினை தினமும் காலை 08.30 மணி தொடக்கம் மாலை 04.30 மணி வரை மாநகர சபையில்  நேரடியாக அதற்கான மொத்த கட்டணமாக 25,000 ரூபா இனை செலுத்தி பெற்றுக் கொள்ள முடியும்.

2. அனுமதி பெற வரும் போது இறப்பையும், அதற்கான காரணத்தையும் உறுதிப்படுத்திய வைத்தியரின் கடிதம் அல்லது சான்றிதழ் மற்றும் மரணித்தவரின் வதிவிடத்தை உறுதிப்படுத்தும் பிரிவு கிராம சேவை உத்தியோகத்தரின் சிபார்சு கடிதம் என்பன சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

3. வழமையான தகனக் கிரியைகளின் போது செய்யப்படும் கடமைகளை தகன இயந்திரம் அமைக்கப்பட்டுள்ள அறை தவிர்த்து வளாக எல்லைக்குள் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தாங்களே செய்து கொள்ளலாம்.

4. தகன அறையினுள் கடமை செய்பவருடன் மேலும் ஒருவருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும்.

5. இடைத் தரகர்கள் எவரும் இந் நடைமுறைகளுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் மேலும் பிரேத எரியூட்டல் தொடர்பில் வேறு எவருக்கும் எந்தக் கட்டணமும் செலுத்த தேவையில்லை என்பதுடன் இவ்வேலைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எதுவித அன்பளிப்புக்களை வழங்குவதும் கட்டாயமாக தவிர்க்கப்பட்டுள்ளது.

6. மின் தகன வளாகத்திற்குள் பட்டாசு கொழுத்துதல் உள்ளிட்ட இலகுவில் தீப்பற்றக் கூடிய எந்த செயற்பாடுகளையும் செய்ய முடியாது.

7. இறுதிக் கிரியைகளின் பின் அஷ்தியினை எடுத்து வைப்பதற்காக மண் முட்டி - 01, வெள்ளை துணி என்பவற்றையும், தகனம் செய்யும் தினத்தன்றே கையளிக்க வேண்டும்.

8. தகனத்தினை தொடர்ந்து வரும் 3 நாட்களுக்குள் அஷ்தியினை  பெறுவதற்காக தகன அனுமதியை கோரி விண்ணப்பித்த நபர் பணம் செலுத்திய பற்றுச்சீட்டுடன் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும்.

மேலதிக தகவல்களுக்கும் / முறைப்பாடுகளுக்கும்:

  • மாநகர சபை (பொது): 065 222 2275                       
  • ஆணையாளர் : 065 222 2666
  • மின் அஞ்சல்  :  battimc@gmail.com
  • இணையதளம் : www.batticaloa.mc.gov.lk
  • மாநகர ஆணையாளர், 
  • மாநகர சபை, 
  • மட்டக்களப்பு.

Comments