மட்டக்களப்பில் ஏற்றுமதி நோக்கிய கக்கரிக்காய் உற்ப்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு.....

 மட்டக்களப்பில் ஏற்றுமதி நோக்கிய கக்கரிக்காய் உற்ப்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு.....

விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் உள்வாங்கப்பட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டமானது கிராமிய வீதிகள் அபிவிருத்ததி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்ததில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்ட இக் கூட்டத்தில் விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின்கீழ் உள்வாங்கப்பட்ட விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அதனை நிவர்த்தி செய்யக்கூடிய வழி வகைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக ஏற்றுமதி நோக்கிய கக்கரிக்காய் உற்ப்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் உரிய அதிகாரிகளினால் அவற்றிற்கான தீர்வுகளும் முன்மொழியப்பட்டன.



Comments