திருகோணமலை உயர்தொழில்நுட்பக் கல்லூரியில் மரநடுகை நிகழ்வு......
திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால், இலங்கையில் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் எனும்தொனிப்பொருளில், திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுத்துள்ள பசுமைத் திட்டத்தின் கீழ் மரநடுகை நிகழ்வு திருகோணமலை உயர்தொழிநுட்பக் கல்லூரியில் இடம்பெற்றது
திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவன பணிப்பாளர் அருட்பணி.கலாநிதி போல் றொபின்சன் அடிகளாரின் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் கிழக்கிலங்கை மனித மேம்பாட்டு பொருளாதார நிறுவனத்தின் அனுசரணையுடன்இ இடம்பெற்ற பசுமை செயற்திட்டத்தை பணிப்பாளர் து.பிரதீபன், கற்கை நெறிகளின் துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து மர நடுகையினை ஆரம்பித்து வைத்தனர்
நிகழ்வில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எகெட் கரித்தாஸ் உத்தியோகத்தர்களான பிரான்சிஸ், ரஜித்இ பிரசாத், பிரதேச செயலக சுற்றுச்சூழல் உத்தியோகத்தர் சர்மிளா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment