அமிர்தகழியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு.....
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அமிர்தகழியில் மேசன் வேலையில் ஈடுபட்ட இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
கவனயீனம் காரணமாக இடம்பெற்ற விபத்தில் மட்டக்களப்பு இருதயபுரத்தை சேர்ந்த இருவரே உயிரிழந்தனர். வீடு ஒன்றின் நிர்மாணப் பணியின் போது, பிரதான மின்சார இணைப்பில் தகடு இணைந்திருந்ததை அவதானிக்காது வேலையில் ஈடுபட்ட போதே உயிரிழந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment