ஆரையம்பதி சமுர்த்தி பயனாளிகளின் முன்னேற்ற செயற்பாடுகளை கள விஜயத்தில் பார்வையிட்ட கருத்திட்ட முகாமையாளர்....
ஆரையம்பதி சமுர்த்தி பயனாளிகளின் முன்னேற்ற செயற்பாடுகளை கள விஜயத்தில் பார்வையிட்ட கருத்திட்ட முகாமையாளர்....
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் சமுர்த்தி பயனாளிகளை மேம்படுத்துவதற்காக வாழ்வாதார உதவிகள் மற்றும் சமுர்த்தி வங்கியூடாக கடன்கள் வழங்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக பலவேறு வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது. இதுவே சமுர்த்தி திட்டத்தின் பிரதான நோக்கமும் ஆகும்.
இதன் அடிப்படையில் நாடுபூராவும் 2021ம் ஆண்டு 200000 குடும்பங்களை மேம்படுத்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பல நலனுதவி திட்டங்கள் வழங்கப்பட்டன. இவ்வுதவிகளை பெற்றுக் கொண்ட மண்முனை பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு நெசவுத்தொழில் மற்றும் சிறு வியபாரா நிலையங்கள் ஊடாக தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவிகள் வழங்கப்பட்டன. இச்செயற்பாடுகள் சிறப்பாக செயற்படுத்தப்படுகின்றதா என அன்மையில் கள விஜயம் மேற் கொண்ட மண்முனைபற்று பிரதேச செயலக சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் சோ.தழிழ்வாணி நேரில் சென்று பார்வையிட்டு சிறப்பாக செயற்பட்டவர்களை பாராட்டியுள்ளார்.
அத்துடன் புதிதாக தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சமுர்த்தி வங்கியூடாக கடன்களை கோரியுள்ள சமுர்த்தி பயனாளிகளின் தொழில் தளங்கள், தோட்டங்களை பார்வையிட்டதுடன் கடனுக்கான சிபார்சினை மேற் கொண்டு துரிதமாக கடனகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
Comments
Post a Comment