மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்ணெண்ணை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை.....
சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக இலங்கை மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணையை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது
கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கைகளுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்ணெண்ணை பகிர்ந்தளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1798 மீனவர்கள் இந்த மண்ணெண்ணையை பெறுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதன்கீழ் முதல் கட்டமாக 75லீற்றர் வீதம் 80 மீனவர்களுக்கான மண்ணெண்ணை வழங்கும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு பாலமீன்மடு கிராமிய கடற்தொழில் அமைப்பின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து மீனவர்களுக்கு வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு கடற்தொழில் திணைக்கள அதிகாரி அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஈழ மக்கள் ஜனநாயக முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சிவானந்தராஜா, கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சரின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.தயாஜீவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன் போது பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு மானிய அடிப்படையில் மண்ணெண்ணை வழங்க நடவடிக்கைகள் மேற்கொண்ட அரசாங்கம் மற்றும் கடற்தொழில் அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக மீனவர் அமைப்புகள் தெரிவித்தன.
Comments
Post a Comment