செல்வராஜனின் பொன்விழா நிகழ்வும், இலக்கியத் தென்றல் மலர் வெளியீடும்.......
மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய எழுத்தாளரும், பல்துறைக் கலைஞருமான கோவிலூர் செல்வராஜனின் பொன்விழா நிகழ்வும், இலக்கியத் தென்றல் மலர் வெளியீடும் (11) மட்டக்களப்புத் தமிழ்ச் சங்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப் புரவலர் விநாயகமூர்த்தி றஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக கிழக்கு மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர் கலாநிதி மு.கோபாலரெத்தினம், கொழும்பு தேசிய கல்வி நிறுவக தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர் முனைவர் முருகு தயாநிதி மற்றும் அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளரும், ஆய்வாளருமான சட்டத்தரணி பாடும்மீன் ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
Comments
Post a Comment