கதிர்காம பாதயாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை திறந்து வைப்பு.....
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்குச் செல்லும் பாதயாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை (12) காலை சம்பிரதாய பூர்வமாக திறக்கப்பட்டது.
கடந்த வருடம் 28,820 பேர் காட்டுப் பாதையில் பயணித்திருந்தனர். இம்முறை 45 ஆயிரம் பேர் அளவில் பயணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கதிர்காமம் முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் ஜுன் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜுலை மாதம் 4 திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைகின்றது.
இந் நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டக்ளஸ், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன், ஆலய பிரதமகுரு, லகுகல பிரதேச செயலாளர், லகுகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வனவிலங்குப் பிரிவினர் இராணுவ பொறுப்பதிகாரி என அனைவரும் ஒன்றினைந்து காட்டுப்பாதையை திறந்து வைத்தனர்.
Comments
Post a Comment