அரச உத்தியோகத்தர்களுக்கு யோகா பயிற்சி - மாவட்ட செயலகம் ஏற்பாடு.....

 அரச உத்தியோகத்தர்களுக்கு யோகா பயிற்சி - மாவட்ட செயலகம் ஏற்பாடு.....

சர்வதேச யோகாதினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு யோகா பயிற்சி விழிப்பூட்டல் நிகழ்வொன்று மாவட்ட செயலகத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இவ் யோகா பயிற்சி ஆரம்ப நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின் தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இன்று (21) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதனூடாக மாவட்ட செயலக அரச உத்தியோகத்தர்கள் யோகாக் கலை தொடர்பான அறிவினைப் பெற்றுக் கொள்வதுடன் தமது வாழ்வில் யோகா பயிற்சினை பிரயோகப்படுத்தி பயன்பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிகழ்வில் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா உரையாற்றுகையில் யோகக் கலையின் சிறப்புக்கள் மற்றும் இதனூடாக மனிதர்கள் பெற்றுக் கொள்ளும் பயன்கள் தொடர்பாக தெழிவு படுத்தினார்.
இதுதவிர உத்தியோகத்தர்களுக்கான யோகா உடற்பயிச்சியினை மண்முனைப்பற்று பிரதேச செயலக கிரமசேவை நிர்வாக உத்தியோகத்தர் கே. ராஜன் நடாத்திவைத்தார்.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், புதுக்குடியிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலை வைத்திய நிபுனர் டாக்டர். கிரிசாந்த், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் கே.மதிவண்ணன் உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு மாநகர சபை உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.


Comments