மட்டு.செங்கலடி பிரதேச செயலகத்தை திடீரென முற்றுகையிட்ட பொதுமக்கள்.....
'அஸ்வெசும' சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் தம்மை உள்வாங்க கோரி மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கலடி பிரதான வீதியில் இருந்து செங்கலடி பிரதேச செயலகம் வரை சென்றவர்கள், செங்கலடி பிரதேச செயலக நுழைவாயிலின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், 'அஸ்வெசும' சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் தம்மை உள்வாங்க கோரியும் முறையற்ற பட்டியல் தயாரிப்பை மீள் பரிசீலனை செய்யக்கோரியும் சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
சுமார் அரை மணி நேரமாகியும் அதிகாரிகள் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகை தரவில்லை என தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதேச செயலக வளாகத்தினுள் நுழைந்து பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டனர்.
இதன் போது வருகை தந்த செங்கலடி பிரதேச செயலகத்தின் உதவிபிரதேச செயலாளர் நிருத்தா பிருந்தனிடம் தமது கோரிக்கைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்தனர்.
Comments
Post a Comment