ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் இரத்ததான முகாம்.....
மட்டக்களப்பு இரத்த வங்கியின் ஆதரவோடு ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் 2008 O/L - 2011 A/L நண்பர் வட்டத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்ததான முகாம் (10)ம் திகதி கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் அதிதியாக பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் கலந்து கொண்டதுடன், பழைய மாணவர் அமைப்பின் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.றாசிக் அவர்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்வில் 142 பேர் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கியிருந்தனர். இந்நிகழ்வுக்கு நிதிப்பங்களிப்பு வழங்கிய அனுசரனையாளர்கள் மற்றும் முழு நேரமும் பணியாற்றிய மட்டக்களப்பு இரத்த வங்கி உத்தியோகத்தர்கள், நண்பர் வட்ட உறுப்பினர்கள், மேலதிக உதவிகளை வழங்கியோர், நலன்விரும்பிகள், ஏனைய நண்பர் வட்ட நண்பர்கள், கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் ஓட்டமாவடி தேசிய பாடசாலை 2008 O/L-2011 A/L நண்பர் வட்டத்தினர் நன்றி தெரிவிக்கின்றனர்.
Comments
Post a Comment