தெரு நாய்களில் கவணம் செலுத்தவும் பாதுகாப்பாய் இருங்கள்....
அன்மையில் களுதாவளையில் இறந்த நிலையில் காணப்பட்ட நாயின் உடற்பாகம்
விசர் (நீர் வெறுப்பு) நோய் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் Medical Research Institute இற்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
எனவே பொது மக்கள் இதுபற்றி கவனமாயிருக்குமாறு அறிவூட்டப்படுகின்றார்கள். நாவினால் வீணி வடிந்த நிலையில் நாவினை தொங்கப்போட்டவாறு நோயுற்றது போன்று அங்குமிங்குமாக அலைந்து திரியும் நாய்கள் அவதானிக்கப்பட்டால் அது பற்றி மிக அவதானமாயிருப்பதுடன் அதுபற்றி உடன் பொலிஸ் நிலையத்திற்கு மற்றும் பிரதேச சபைக்கு அறியத்தருமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் யாருக்காவது நாய் கடித்தால் உடனடியாக காயத்தினை சவர்க்காரமிட்டு மூன்று தொடக்கம் ஐந்து நிமிடங்கட்கு தேய்த்து நன்கு கழுவிய பின்பு தாமதிக்காது உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுதல் மிக மிக அவசியம்.
நாய்களுக்கு நீர் வெறுப்பு (விசர்) நோய்க்கு எதிரான தடுப்பூசி மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் நீர் வெறுப்பு நோய் தடுப்பு பிரிவினால் அண்மையில் வழங்கப்பட்டது. கவனிப்பாரற்று அலைந்து திரியும் நாய்கள் தான் ஆபத்தானவை. அவை தடுப்பூசியேற்றப்படாமல் இருப்பதுதான் ஆபத்தான நிலையினை ஏற்படுத்துகின்றது.
Comments
Post a Comment