பிறைந்துரைச்சேனை ஹிழ்ரிய்யா பள்ளிவாயலில் மாபெரும் இரத்ததான முகாம்...

 பிறைந்துரைச்சேனை ஹிழ்ரிய்யா பள்ளிவாயலில் மாபெரும் இரத்ததான முகாம்...

வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை மஸ்ஜிதுல் ஹிழ்ரிய்யா பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்குமான இரத்ததான முகாம் (04)ம் பள்ளிவாயல் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் அதிகமானவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியதை அவதானிக்க முடிந்தது.
“நாட்டில் நிலவும் குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய உதிரங்களை வழங்கி பெறுமதியான உயிர்களைக் காப்போம்." எனும் தொணிப்பொருளில் நடைபெற்றது.
இப்பள்ளிவாயல் நிர்வாகம் கடந்த வருட காலமாக சமூகம் சார்ந்த பல்வேறுபட்ட நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, இப்பிரதேசத்தில் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு, மிகத்தேவையுடயோருக்கு உணவளிக்க உணவு வங்கி ஆரம்பம், பெருநாள் தினத்தில் வீட்டுக்கு ஒரு உணவுச்சகன் செயற்றிட்டம் போன்றவை குறிப்பிடத்தக்கது.







Comments