ஜெய்நாக் மற்றும் ரேனுசாந் ஆகியோரின் சிறப்பாட்டம் சென்றலுக்கு வெற்றியை தந்தது...

 ஜெய்நாக் மற்றும் ரேனுசாந் ஆகியோரின் சிறப்பாட்டம் சென்றலுக்கு வெற்றியை தந்தது...

2023ம் ஆண்டுக்கான பாடசாலை மட்ட Div-III போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் 15ம் திகதி நடைபெற்ற 15 வயதிற்குட்டோருக்கான போட்டியில் கடந்த போட்டியில் சிறப்பான முறையில் வெற்றி கொண்ட ஏறாவூர் அறபா கல்லூரியை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி  முதல் இனிங்ஸ் வெற்றியுடன் தன் வெற்றியை பதிவிட்டுக் கொண்டது.

 முதலில் துடுப்பெடுத்தாடிய ஏறாவூர் அறபா கல்லூரி 42.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் அறபா கல்லூரி சார்பாக திரும்பவும் சஹமான் அகமட் 63 ஓட்டங்களையம், அசீல் 22 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் மெதடிஸ்த மத்திய கல்லூரி சார்பாக ரினுசாந்,  லதுர்சன், அபூர்வன், பிரனவன்  தலா 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி இருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களம் நுழைந்து மெதடிஸ்த மத்திய கல்லூரி 52 ஓவர்களில் 09 விக்கெட்டுக்களை இழந்து 313 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது துடுப்பாட்டத்தில் ஜெய்நாக் அரைச்சதம் கடந்து 62 ஓட்டங்களையும், லதுர்சன் 43 ஓட்டங்களையும், மதுசாந் 35 ஓட்டங்களையும், அகில்சிக் ஆட்டமிழக்காது 30 ஓட்டங்களையும், ரேணுசாந் 25 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். அறபா கல்லூரியின் பந்து வீச்சு சார்பாக சஹமான் அகமட் 49 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டக்களையும், அபிஸ் அகமட் 52 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி இருந்தனர். 

இதன் அடிப்படையில் முதல் இனிங்ஸ் வெற்றியை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லுரி பெற்றுக் கொண்டது. இம்மாணவர்களுக்க ஊக்கமளித்த பெற்றோர் மற்றும் பயிற்றுவிப்பாளருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

Comments