பிரணவனின் சதத்துடன் மட்டு இந்துக்கல்லூரியை பதம்பார்த்த மெதடிஸ்த மத்திய கல்லூரி....

 பிரணவனின் சதத்துடன் மட்டு இந்துக்கல்லூரியை பதம்பார்த்த மெதடிஸ்த மத்திய கல்லூரி....



2023ம் ஆண்டுக்கான பாடசாலை மட்ட Div-III போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் 30ம் திகதி  சிவானந்தா மைதானத்தில்  நடைபெற்ற 15 வயதிற்குட்டோருக்கான போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும் மோதி இருந்தன, இப்போட்டியில் பிரணவனின் சதத்துடன் இனிங்ஸ் மற்றும் 185 ஓட்டங்களாலால் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி வெற்றியை பதிவிட்டுக் கொண்டது  

முதலில் துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி 50 ஓவர்களில் 06 விக்கெட்டுக்களையும் இழந்து 303 ஓட்டங்களை பெற்று தன் துடுப்பாட்டத்தை நிறுத்திக் கொண்டது. துடுப்பாட்டத்தில் பிரணவன் மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடி தன் கன்னி சதத்தை பதிவிட்டார், இவர் ஆட்டமிழக்காமல் 133 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார், இவருடன் இனைந்து அகிலேஸ் 70 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். மட்டக்களப்பு இந்துகல்லூரி பந்து வீச்சு விபரம் எமக்கு கிடைக்க பெறவில்லை.  

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களம் நுழைந்து மட்டக்களப்பு இந்துகல்லூரி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 70 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி சார்பாக டிரேஸ் 04 விக்கெட்டுக்களையும், லதுர்சன் 04 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி இருந்தனர். மீண்டும் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மீண்டும் சொற்பமான 48 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தடுமாறியது, பந்து வீச்சில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி சார்பாக டிரேஸ் 05 விக்கெட்டுக்களை மீண்டும் கைப்பற்றி இருந்தார்.

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி ஓரு இனிங்ஸ் மற்றும் 185 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 

Comments