கதிர்காம பாதை யாத்திரை சென்ற மட்டக்களப்பை சேர்ந்த பெண்ணொருவர் யானை தாக்கியதில் பலி.....

 கதிர்காம பாதை யாத்திரை சென்ற மட்டக்களப்பை சேர்ந்த பெண்ணொருவர் யானை தாக்கியதில் பலி.....

கதிர்காமத்துக்கான பாதை யாத்திரை சென்ற  பெண்ணொருவர் காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி (13)  உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கதிர்காமத்திலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தீர்த்த கிணற்று பகுதிக்கு சென்றபோதே காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்  63 வயதுடைய மட்டக்களப்பை சேர்ந்தவர்  என பொலிஸார்  தெரிவித்தனர் . 

இதேவேளை சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Comments