கிழக்கு மாகாண சுகாதார, சமூக சேவைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சினால் நடமாடும் சேவை.....

 கிழக்கு மாகாண சுகாதார, சமூக சேவைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சினால் நடமாடும் சேவை.....

கிழக்கு மாகாண சுகாதார, சமூக சேவைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சினால் நடமாடும் சேவை மட்டக்களப்பில் (08) நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான், திணைக்களங்களின் செயற்பாடுகளை மக்களின் காலடிக்கு கொண்டுசெல்லும் வகையில் நடமாடும் சேவை திட்டத்தினை ஆரம்பித்துள்ளார்.

முதலாவது நடமாடும் சேவை, விசேட தேவையுடையவர்கள், முதியவர்கள் ஆகியோரை கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நடாத்தப்பட்டது.

இதன் போது முதியோர் கொடுப்பனவு அட்டை, முதியோர் அடையாள அட்டை, முதியோர் விசேட கொடுப்பனவு அட்டைகள் என்பன வழங்கிவைக்கப்பட்டன.

மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் முகம்மது றபீக் ஸியாகூல் ஹக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் இணைப்புச்செயலாளருமான பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் S.அருள்மொழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments