சமுர்த்தி வங்கிகள் மத்திய வங்கியின் கீழ் கொண்டு வரப்படும்......

 சமுர்த்தி வங்கிகள் மத்திய வங்கியின் கீழ் கொண்டு வரப்படும்......


சமுர்த்தி வங்கிகளும் இலங்கை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வரப்படும். நிதி இராஜங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இம்முயற்சியை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான விதிமுறைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளை திட்டமிடுவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கும் இடையில் ஏற்கனவே கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

'அஸ்வெசும' நலத்திட்டங்கள் மூலம் குறைந்த வருமானம் பெறுவோருக்கு அல்லது அரசாங்க நிவாரணம் தேவைப்படுபவர்களுக்கு அநீதி இழைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும். ஆனால் மக்களை மேலும் ஒரு சார்பு மனநிலையில் வைத்திருக்க அரசு தயாராக இல்லை. அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் குறைந்த வருமானம் பெறுபவர்களை அதிகாரம் பெற்றவர்களாக சமூகமயமாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அந்த இலக்கை அடைய, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சேவைகளை முன்னரை விடவும் மக்களின் வலுவூட்டலை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நம்புகிறது எனவும் தெரிவித்துள்ளார்.




Comments