மட்டக்களப்பில் மாவட்ட சிறுவர் சபை மீளமைப்பு.......
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாவட்ட சிறுவர் சபை உறுப்பினர்கள் தெரிவு உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (08) இடம் பெற்றது.
சிறுவர் உரிமை மேம்பாட்டு திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் 14 பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட சிறார்களில் இருந்து சிறுவர் சபைக்கான உறுப்பினர்கள் வாக்கெடுப்பு மூலம் தலைவர், உப தலைவர், செயளாலர், பொருளாளர் தெரிவு செய்யப்பட்டார்கள்.
சிறார்களின் பங்கேற்பு உரிமையை மேம்படுத்துவதற்கு உதவும் முகமாக இச்சபை இரு வருடம் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
சிறுவர் உரிமை மேம்பாட்டை மேலும் வலுப்படுத்த (AU Lanka) ஏயூ லங்கா நிறுவனம் இணைத்து செயற்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
Comments
Post a Comment