மட்டக்களப்பில் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டம்.....
மட்டக்களப்பு மாவட்ட கணக்காய்வு முகாமைத்துவ குழுவின் இரண்டாம் காலான்டிற்கான கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று (21) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய கணக்காய்வு அத்தியட்சகர் மாஹிர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் மாவட்ட செயலகத்தின் கணக்காய்வு ஐயவினாக்கள் தொடர்பாகவும், கடந்த கூட்டத்தினபோது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் மீளாய்வு தொடர்பாகவும், உள்ளகக் கணக்காய்வு அவதானங்கள், கண்காய்வு ஐயவினாக்கள், நிதி செயற்பாட்டு முன்னேற்றங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.
இதுதவிர பாரளுமன்ற பொதுக் கணக்குகள் மீதான குழுவிற்கு அறிக்கையிடப்பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இக்கூட்டத்தின்போது பிரதம கணக்காளர் எம்.பசீர், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந், பிரதான உள்ளகக் கணக்காய்வாரள் ஆர்.காயத்திரி உள்ளிட்ட மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
Comments
Post a Comment