வண.வில்லியம் ஓல்ட் அவர்களினால் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதல் ஆங்கில பாடசாலை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி...

வண.வில்லியம் ஓல்ட் அவர்களினால் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதல் ஆங்கில பாடசாலை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி...

 1814 ஆம் ஆண்டு ஆனி மாதம் 29 ஆம் திகதி வண.வில்லியம் ஓல்ட் அவர்களினால் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதல் ஆங்கில பாடசாலை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி. அத்தோடு இலங்கையின் மிகப்பழமையான பாடசாலையாகவும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி காணப்படுகின்றது.

ஐந்து மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை தற்போது மாவட்டம் விட்டு மாவட்டம் தாண்டி தமது கல்விச் சேவைக்குள் பல மாணவர்களை உள்வாங்கி கல்விமான்கள் பலரை உருவாக்கியுள்ளது. பாரம்பரியமாக, ஒடுக்கப்பட்டவர்கள் ஏழைகள் கல்வி கற்க முடியாது என புறந்தள்ளப்பட்ட அனைவருக்குமே இந்த மெதடிஸ்த மத்திய கல்லூரி ஒரு அடைக்கலமான பாடசாலையாக காணப்படுகின்றது.

வரலாற்று தொடர்ச்சியாக 200 ஆண்டுகள் கடந்தாலும் இன்றும் கூட பாடசாலையின் வரலாறு பேணப்படுகின்றமை சிறப்பம்சமாகும். 209 ஆவது ஆண்டில் கால் பதிக்கும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி தமது கல்விச் சேவையில் மென்மேலும் வளரவும் சாதனைகள் பல புரியட்டும்.

Comments