மணிவண்ணன், மன்சூர் ஆகியோருக்கு கிழக்கு ஆளுநரால் புதிய பதவி....
நாகராசா மணிவண்ணன், ஏ.மன்சூர் ஆகியோருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி ஆணையாளராக பதவி வகித்த நாகராசா மணிவண்ணன் உள்ளூராட்சி அமைச்சின் பதில் செயலாளராகவும், பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) பதவி வகித்த A.மன்சூருக்கு வீதி அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளராகவும் நியமிக்க பிரதம செயலாளரால் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து, அப்பரிந்துரையை ஏற்ற கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் குறித்த இருவருக்கும் அந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.
Comments
Post a Comment