மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக நடராஜா சிவலிங்கம் நியமனம்......
மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக நடராஜா சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களினால் வழங்கப்பட்டுள்ளது.
ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள நடராஜா சிவலிங்கம் திங்கட்கிழமை மட்டக்களப்பு மாநகர சபைக்கு சென்று தனது கடமையினை ஆரம்பிக்கவுள்ளதாக் தெரியவருகின்றது..
இலங்கை நிருவாக சேவை (தரம் -1 ) உத்தியோகத்தரான இவர் மன்னார் மாவட்ட கமநலசேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளராகவும், மட்டக்களப்பு மாவட்ட கமநலசேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளராகவும், உலக வங்கி திட்டத்தி சிமாட் கிலைமட் ஸ்ரீ லங்கா திட்டப் பணிப்பாளராகவும், கிழக்கு மாகாணக் கல்விப் பணிமனையின் பிரதிப் பணிப்பாளராகவும், கிழக்கு மாகாண கூட்டுறுவு ஆணையாளராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment