மட்டு. காத்தான்குடியில் குருதிக் கொடையாளர்கள் கௌரவிப்பு....

 மட்டு. காத்தான்குடியில் குருதிக் கொடையாளர்கள் கௌரவிப்பு....

மட்டக்களப்பு காத்தான்குடியில் சர்வதேச குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு, குருதிக் கொடையாளர்கள் கௌரவிப்பும் இரத்தான நிகழ்வும் நடைபெற்றது.

காத்தான்குடி தள வைத்தியசாலையின் குருதிக் கொடையாளர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், காத்தான்குடி தள வைத்தியசாலையின் அனுசரணையுடன் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

காத்தான்குடி தள வைத்தியசாலையின் இரத்த வங்கி அதிகாரி வைத்தியர்  அலீமா ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில், பத்து தடவைகளுக்கு மேல் குருதியை தானம் செய்த 42 குருதிக் கொடையாளர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

கௌரவிப்பு நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகுணன், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஜாபீர்,  காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதயஸ்ரீதர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Comments