உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆயிரம் மரங்கள் நடும் திட்டம் முன்னெடுப்பு......
டேவிட் பிரீஸ் நிறுவனத்தின் உபகுழுவான அசட்லைன் பினான்ஸ் நிறுவனத்தினால் உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் கடற்கரை பகுதியில் குறித்த ஆயிரம் மரம் நடும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அசட்லைன் பினான்ஸ் நிறுவனத்தின் முகாமையாளர் மிலங்கடி சில்வா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அசட்லைன் பினான்ஸ் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் எஸ்.ராஜ்குகன், மட்டக்களப்பு மாவட்ட கரையோரம் பேணல் திணைக்களத்தின் பிராந்திய பொறியியலாளர் துளசிதாசன், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் மதிவண்ணன், டேவிட் பீரிஸ் மற்றும் அசட்லைன் பினான்ஸ் நிறுவனுங்களினால் அதிகாரிகள் ஊழியர்கள், கடற்றொழில் நீரியல்வள திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், மீனவர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டவர்கள் இதன்போது கலந்து கொண்டு மரங்களை நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment