மட்டு: இந்துக்கல்லூரிக்கு கைகொடுக்கும் 93/96 பிரிவு மாணாக்கர்கள்....
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் 93ல் சாதாரணதரத்திலும் 96 உயாதரத்திலும் கல்வி கற்ற மாணவர்கள் ஒன்றினைந்து மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் வளர்ச்சிக்காக தம்மால் முடிந்தவற்றை செயற்படுத்தி வருகின்றனர். 2022ம் ஆண்டு மார்கழியில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பு பல்வேறு வேலைத்திட்டங்களை தாம் ஒன்றினைந்து செய்து வருகின்றனர்.
குறிப்பாக பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்து மதில் சுவர்களில் வர்ணம் பூசியுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் மாணவர்களின் சித்திரக்கலையை மேலுயர்த்துவதற்கானவும் பாடசாலை வளாகத்தை அழகுபடுத்துவதற்காகவும் சுவர்களில் சித்திரம் வரையும் போட்டி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அத்துடன் 2024ம் ஆண்டு க.பொ.த (சாதாரண) தரத்தில் பரீட்சை எழுதவுள்ள 41 மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு முதல் கட்டமாக ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களை பாடசாலை முடிவுற்றதும் நடாத்துவதற்கான முன் ஏற்பாடுகள் செய்து தற்போது ஆரம்பித்தும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இனிவரும் காலங்களில் தழிழ் மற்றும் விஞ்ஞான பாடங்களையும் தாங்கள் ஆசியர்களை ஒழுங்கமைத்து நடாத்த திட்டமிட்டுள்ளதாக அதன் அங்கத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே 93ல் சாதாரணதரத்திலும் 96 உயாதரத்திலும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் கல்விகற்று தற்போது புலம்பெயர்ந்து வாழும் தம் உள்ளங்களை தம்முடன் இணைந்து கொண்டு நம் பாடசாலையை மேலுயர்ந்த வருமாறு அன்புடன் இவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாமும் பாராட்டுகின்றோம் கல்விக்கான இவ்வர்ப்பணிப்பு தொடரட்டும்.
Comments
Post a Comment