நாளை 29 அணிகள் விபரம் வெளியீடு: Trophy of VMD வெபர் மைதானத்தில்......

 நாளை 29 அணிகள் விபரம் வெளியீடு:  Trophy of VMD  வெபர் மைதானத்தில்......

வேல்முருகன் டிஸ்றிபியூட்டஸ் நடாத்தும் மட்டக்களப்பு மாவட்ட 04 வலயங்களை உள்ளடக்கியதான பெண்கள் உதைபந்தாட்ட போட்டிகளின் பங்குபற்றும் 16 பாடசாலைகளின் அணி விபரம் நாளை காலை 10 மணிக்கு மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

அதே வேளை இந்த 16 பாடசாலைகளுக்குமான போட்டி அட்டவணையும் நாளை வெளியிடப்படவுள்ளதுடன், இப்போட்டிகய் யாவும் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக  வேல்முருகன் டிஸ்றிபியூட்டஸ் உரிமையாளர்களில் ஒருவரான காசிப்பிள்ளை சதீசன் சற்று முன் தெரிவித்துள்ளார்.

ஜூலை 1ம் மற்றும் 2ம் திகதிகளில் முதல் தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட 16 பாடசாலைகளை ஒன்றினைத்து நடாத்தப்படவுள்ள இந்த பெண்கள் உதைபந்தாட்ட போட்டிகளில் எந்த எந்த அணிகள் போட்டிகளில் பங்குபற்றி வேல்முருகன் டிஸ்றிபியூட்டஸ் வழங்கும் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான பரிசில்களை பெற்றுக் கொள்ளவுள்ளன என்பதை யாவரும் அறிய தயாரகவுள்ளோம்.

யாரும் இப்போட்டிகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடாத்தி பெண்கள் உதைபந்தாட்ட போட்டிகளை வளர்க்க முயற்ச்சிக்காத போதிலும் இப்புதிய முயற்சியை தம் கைகளில் ஏந்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு முன் மாதிரியாக செயற்படும் வேல்முருகன் டிஸ்றிபியூட்டஸ் பாராட்டுகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் உதைபந்தாட்டம் வளர நாம் ஒன்றினைந்து செயற்படுவோம்.


Comments