மட்டு:இந்துக்கல்லூரிக்கு புதிய அதிபராக பகீரதன் 22 கடமையேற்றுக் கொண்டார்....

 மட்டு:இந்துக்கல்லூரிக்கு புதிய அதிபராக பகீரதன் 22 கடமையேற்றுக் கொண்டார்....

மட்டக்களப்பு இந்துக்கல்லுரியின் புதிய அதிபராக  வெல்லாவெளியை பிறப்பிடமாக கொண்ட கணபதிப்பிள்ளை பகீரதன் அவர்கள் 22.02.2023 ஆகிய இன்று தன் கடமையை பொறுப்பெற்றுக் கொண்டார்.
தன் ஆரம்பகல்வியை வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலத்தில் தொடங்கிய இவர் பிற்காலத்தில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலத்தில் கற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவர் இதற்கு முன்பு கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலத்தில் அதிபராக கடமையாற்றி இருந்தார்.

தற்போது மட்டக்களப்பை நிரந்தர வசிப்பிடமாக கொண்டு வசித்துவரும் இவரின் சேவை மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். 





Comments